புதிய அகராதி, தற்போது படிமம் சேர்க்கும் வசதியுடன்!.
இதுவரை மொத்தம் 1697 சொற்கள் சேர்க்கபட்டுள்ளன.
+3 / -1

கங்கு (kangu)


பனை மட்டையின் அடிப்பகுதி.

+3 / -1

கரம் (karam)


பனையோலையை வீடு வேய்வதற்கோ வேலியடைப்பதற்கோ பயன்படுத்தும் பொருட்டு பதப்படுத்துவதற்காகப் போடப்படும் அடுக்கு. இதனைக் கரம்போடுதல் என்பர். கரம்போட்டுப் பல நாள் பதப்படுத்திய பின்னரே பயன்படுத்த முடியும்.

+2 / -0

உமல் (bag made of palmyra leaf)


பனையோலையால் பின்னப்பட்ட பை. இலங்கையின் வடபுலச் சொல்.

+3 / -1

உம்மங்காய் (palmyra fruit without seeds.)


விதை இல்லாத பனங்காய். இலங்கையின் வடபுலச் சொல்.

+2 / -1

செய் (Do)


ஒர் வேலையை பண்ணுதலை "செய்தல்" என்று சொல்லவேன்டும். அந்த வேலையை "செயல்" என்றும் சொல்லவேண்டும்.

உ.தா. நான் சொன்னதை செய்-"Do what I told you"

+6 / -0

கவ்வை (kavvai)


எள்ளின் பிஞ்சுப் பருவம். கவ்வை கடந்த நிலையிற்றான் முற்றிய எள் பெறப்படுகிறது.

+4 / -1

ஆலி (hail) படிமம்


பனிக்கட்டி, ஆலங்கட்டி, மழைத்துளி, தொடர்ச்சி எனக்கூற‌லாம்

+4 / -0

மூசு (moosu)


பலாவின் பிஞ்சு

+3 / -0

வடு (unripe mango fruit.)


மாவின் பிஞ்சு வடு எனப்படும்.

+4 / -0

புல்லி (pulli)


பூவின் புற மடல்கள்.