உதவி
1. புதிய அகராதியில் தமிழிலே எழுதுவது எப்படி?
எமது புதிய அகராதி கோபியின் தங்கடூர்(தமிழ்) 3.0 என்ற யுனிகோட் தட்டச்சு செயலியை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றது. சுரதாவின் தமிங்கிழிஷ் முறையய் கொண்டு இயங்கும் இந்த செயலியில் தமிழில் எழுதுவது மிகவும் சுலபம்.
அம்மா என்பதை ஆங்கிலத்தில் "ammaa" எண்று எழுதுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
உ.தா. க = ka, கா= kaa, ழ=za, ளை=Lai, லீ= lii
இந்த தட்டச்சினை பழகுவதற்கு இங்கே அழுத்தவும்
2. புதிய அகராதியில் சொற்களை சேர்ப்பது எப்படி?
அகராதியின் வலதுபக்க சட்டத்தின் மேலே உள்ள "சொற்களை சேர்க்க" என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம், சொற்களை சேர்க்கும் பக்கத்திற்க்கு செல்லமுடியும்.
தமிழ்ச்சொல், உரிய ஆங்கில சொல், சொற்பொருள் விளக்கம், உங்கள் மின்னஞ்சல் பெயர் என்பன கட்டாயமாக நிரப்ப வேண்டிய பகுதிகளாகும். மேலதிகமாக ஆங்கில விளக்கம், ஒத்தசொற்கள், எதிர்ச்சொற்கள், வேற்றுமொழி சொற்கள் என்பனவற்றையும் நிரப்பமுடியும்.
தரவுகள் எல்லம் நிரப்பப்பட்டபின்னர் சொற்களை சேர்க்கும் பக்கத்தின் அடியில் உள்ள உடன்படிக்கையை தெரிவு செய்த பின்னர் "சேர்க்க" என்ற பொத்தானை அழுத்துக.
3. எவ்வகையான சொற்களை புதிய அகராதியில் சேர்க்க முடியும்?
நவீன அகராதி மக்களுக்கான முற்றிலும் திறந்த ஒரு அகராதியாகும். இதில் , அடுத்தவரை பாதிக்காத, தூற்றாத, தவறான எண்ணமில்லாத, எவ்வகையான சொற்க்களையும் சேர்ர்பதற்க்கு உங்களுக்கு அனுமதி உண்டு.
நீங்கள் பதியும் சொல் ஓர்
- இலக்கியச் சொல்லக இருக்கலாம்.
- பேச்சு வழக்கில் உள்ள சொல்லக இருக்கலாம்.
- உங்கள் ஊரில் பாவனையில் உள்ள சொல்லக இருக்கலாம்.
- உங்கள் ஊர் பெயராக இருக்கலாம்.
- உங்கள் பெயராக இருக்கலம்.
- தொழில்னுட்ப சொல்லக இருக்கலாம்
- கணணி சம்மந்தப்பட்ட சொல்லக இருக்கலாம்
- திரைப்படங்களிலே பாவிக்கப்பட்ட சொல்லக இருக்கலாம்
- நீங்கள் உருவாக்கின சொல்லக கூட இருக்கலாம்.
4. சுத்தத் தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கில சொல் தருவது எப்படி?
சில நேர்ங்களில் சில சொற்களுக்கு உரிய ஆங்கில சொல் இல்லமல் இருக்கலம் அல்லது கிடைப்பது கடினமாக இருக்கலாம். அப்படியான சொற்க்களுக்கு, தமிழ் சொல்லுக்கு நிகரான ஆங்கில சொல்லை எழுத்துக்க.
உ.தா.
"கரவட்டியான்" - "karavaddiyaan"
"ஆதிரை" - "aathirai"
5. சொற்களில் பிழைகள் காணப்பட்டால் என்ன செய்வது?
இது ஒரு திறந்த அகராதி என்பதால் சொற்களில் காணப்படும் பிழைகளை நீங்களும் திருத்தலாம், உங்களுடைய பங்களிப்பு அந்த சொல்லின் "சொல் மாற்ற விபரங்கள்" பகுதியில் சேர்க்கப்படும்.
ஒரு சொல்லின் விபரத்தை மாற்றுவதற்க்கு, அந்த சொல்லின் விரிவான பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள "இந்த சொல்லை : தொகுக்க" என்பதை அழுத்துக.
6. தவறான எண்ணத்தில் சொல் ஒண்று பதியப்பட்டிருந்தால் என்ன செய்வது?
அடுத்தவரை தூற்றும் அல்லது புண்படுத்தும் விதத்தில் தவறான எண்ணத்துடன் ஒரு சொல் பதியப்பட்டிருந்தால் அதை நீக்கக் கோரி உங்களால் நிர்வாகிகளிடம் முறையிட முடியும்.
முறையிடுவதற்க்கு அந்த சொல்லின் விரிவான பக்கத்தின் அடியில் உள்ள
"இந்த சொல்லை:





