புதிய அகராதி பற்றி
எந்த ஒரு மொழியும் காலத்திற்கேற்ப, காலாச்சார மாற்றங்களுக்கு எற்ப்ப புணர்ச்சியடைவது மறுக்க முடியாத விடயம். ஓரு சகாப்ததிற்கு முன்பு இருந்த தமிழ் மொழியை இன்று இலக்கியம் என்கிறோம். பழைய சொற்கள் மறைவதுவும் புதிய சொற்கள் புகுவதும் மொழிகளுக்கே உண்டான இயல்பு.
- புதிய அகராதி என்றால் என்ன?
புதிய அகராதி என்பது ஒரு முற்றிலும் திறந்த மக்களினால் உருவாக்கப்பட்ட சொற்களஞ்சியம். இலக்கியச்சொற்களில் இருந்து, பேச்சு வழக்குச் சொற்கள், கலைச்சொற்கள், தொழில் நுட்ப்ப சொற்கள் என தமிழில் அடங்கும் அனைத்து விதமான சொற்களுமே இச் சொற்களஞ்சியத்தினில் உள்ளடக்கப்பட்டுவருகின்றது.
இங்கே பதியப்படும் ஒவ்வொரு சொற்களும் பின்வரும் தளங்களிலும் ஊட்டப்படும்
http://www.facebook.com/pages/putiya-akarati/250207766124
https://twitter.com/agaraathi
- புதிய அகராதியின் குறிக்கோள் என்ன?
தமிழ் மொழி இன்று உலகெங்கும் 60 நாடுகளுக்கு மேலாக பாவைனையில் உள்ளது. மொழி ஒன்றாக இருந்தாலும், பேசும் விதம், உச்சரிப்பு, சொற்கள், அர்த்தங்கள் நாட்டுக்கு நாடு, இடத்திக்கு இடம் மாறுபடத்தான் செய்கிறது, ஒவ்வொரு நாளும் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு புது தமிழ்ச் சொல் உருவாகிறது என்றால் தவறில்லை. மறுபுறம் எத்தனையோ தமிழ் சொற்களின் பாவனை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது.
இவற்றை எல்லம் இன்றய, நாளய சமுதாயத்திற்க்காக ஒரு இடத்தில் களஞ்சியப்படுத்துவதே இந்த புதிய அகராதியின் பிரதான நோக்கம். இது தவிர இவ்வகராதி ஒரு தமிழ் ஆங்கில அகராதியாக கூட பாவிக்கப் படலாம்.
- ஏனைய அகராதிகளில் இருந்து புதிய அகராதி எவ்வாறு வேறுபடுகின்றது?
இன்று இணையத்தில் நூற்ற்க்கணக்கான தமிழ் அகராதிகள் உள்ளன. இவற்றில் அனேகமானவை தமிழ் ஆங்கில அகராதிகளாக இயங்கி வருகின்றன. ஏனையவை, யாரோ ஒரு நபரினாலோ அல்லது குழுமத்தினாலோ வரையறுக்க்கப்பட்ட புத்தகங்களை அடிபடையாக கொண்டு இயங்குகின்றன.
இப் புதிய அகராதி இவ்வரையறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாது, தமிழ் அகராதி என்பதிலிருந்து தமிழர்களின் அகராதி என்ற ஒரு படியை நோக்கிச் சொல்லும் முயற்சியாகும். மற்றய அகராதிகளில் இல்லாத இப் புதிய அகராதியின் "முற்றிலும் திறந்த" கொள்கை, உலகில் உள்ள எந்த ஒரு தமிழ் பேசும் நபரையும் தனக்கு தெரிந்த தமிழில் பாவனையில் உள்ள எந்தவொரு சொல்லையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இடமளிக்கிறது. இச் சொற்கள் புத்தகச் சொற்களாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை, வட்டாரச் சொற்கள், பேச்சு வழக்குச் சொற்கள், நபர்களின் பெயர்கள், தமிழர் குடிவாழும் இடங்களின் பெயர்கள் என தமிழர்களுடன் சம்மந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கலாம். - பேச்சுத் தமிழ்ச் சொற்க்களை தமிழாக்காதீர்கள் என்று சொல்பவர்களுக்கு?
உங்கள் கருத்துடன் நாங்கள் சம்மதிக்கிறோம்! ஆனால இவ் அகராதியின் நோக்கம் தமிழை வரையறுப்பதல்ல, காலத்திற்க்கு ஏற்ப இடங்களுக்கு ஏற்ப மொழி திரிபடைவது இயல்பு, சில சொற்க்கள் புத்தகச்சொற்களாகி விட்டன, சில சொற்க்கள் பேச்சுவழக்கிலேயே உள்ளன! நாங்கள் இங்கு இப் பேச்சு சொற்களை தமிழாக்க முயலவில்லை! இவ்வாறான பேச்சு சொற்களும் எங்களை போண்ற தமிழர்களால் இந்த உலகின் ஏதொ ஒரு மூலையில் பேசபட்டுவருகின்றது, பேசப்பட்டது என்பதை மற்றய தமிழர்களும் அறிந்து இருக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்!
ஆனால் இப் பேச்சுச் சொற்க்கள் ஏனைய சொற்களுடன் கலக்கப்படக்கூடாது என்பதற்காகவே தான் , நாங்கள் சொற்களை வகைப்படுத்தி, இப் பேச்சுத் சொற்களை "பேச்சு வழக்குச் சொல்" என்ற வகைக்குள் சேர்த்துள்ளோம்.





