புதிய அகராதி, முற்றிலும் உங்களால் உருவாக்கப்பட்ட சொற்களஞ்சியம்.
இதுவரை மொத்தம் 1700 சொற்கள் சேர்க்கபட்டுள்ளன.
8 / 1

இணையம் (Internet)


உலகில் உள்ள கணிணிகளை ஒளி இழைகளின் மூலம் இணைக்கும் ஓர் அமைப்பு.

7 / 0

பட்டி (corral)


ஊர், ஆடுகளை தற்காலிகமாக அடைத்து வைக்கும் ஓர் இடம்.

உ.தா. சின்னய்யன் பட்டி, பட்டியிலிட்ட ஆடு

6 / 0

நித்யானந்தம் (end of soul [aanma])


நித்யம் என்றால் எப்பொதும் இருப்பது என பொருள். அது இறைநிலை. ஆனந்தம்= ஆன்மா+அந்தம்.ஆன்மா மீண்டும் பிறவி இல்லாமல் இறைவனோடு அந்தம் [முடிவு] ஆகிவிடும் நிலை அதுவே முக்தி. ஆன்மா இந்த நிலை அடைய வேண்டும் என உணர்த்தும் சொல்.

9 / 2

கங்கு (kangu)


பனை மட்டையின் அடிப்பகுதி, கரியில் மூட்டப்பட்ட நெருப்பு.

6 / 1

கரம் (karam)


கை, பனையோலையை வீடு வேய்வதற்கோ வேலியடைப்பதற்கோ பயன்படுத்தும் பொருட்டு பதப்படுத்துவதற்காகப் போடப்படும் அடுக்கு. இதனைக் கரம்போடுதல் என்பர். கரம்போட்டுப் பல நாள் பதப்படுத்திய பின்னரே பயன்படுத்த முடியும்.

5 / 0

உமல் (bag made of palmyra leaf)


பனையோலையால் பின்னப்பட்ட பை. இலங்கையின் வடபுலச் சொல்.

6 / 1

உம்மங்காய் (palmyra fruit without seeds.)


விதை இல்லாத பனங்காய். இலங்கையின் வடபுலச் சொல்.

4 / 1

செய் (Do)


ஒர் வேலையை பண்ணுதலை "செய்தல்" என்று சொல்லவேன்டும். அந்த வேலையை "செயல்" என்றும் சொல்லவேண்டும்.

உ.தா. நான் சொன்னதை செய்-"Do what I told you"

10 / 1

கவ்வை (kavvai)


எள்ளின் பிஞ்சுப் பருவம். கவ்வை கடந்த நிலையிற்றான் முற்றிய எள் பெறப்படுகிறது.

9 / 2

ஆலி (hail)


பனிக்கட்டி, ஆலங்கட்டி, மழைத்துளி, தொடர்ச்சி எனக்கூற‌லாம்